Saturday, 24 March 2012

தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க சில யோசனைகள்

தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க சில யோசனைகள்
இப்போதெல்லாம் நமக்கு காலை வேளைகளிலே தொ(ல்)லைபேசி அழைப்புகள் வந்து விடுகின்றன......
இன்சூரன்ஸ் பாலிசி எடுங்க சார்,
சென்னைக்கு அடுத்து திண்டிவனம் பக்கம் பிளாட் விற்பனை (சென்னைக்கு அடுத்து தாம்பரம் தான் வரும் என்று 1௦௦ முறை சொல்ல சொல்லி இவர்களை எல்லாம் ஒரு நாள் முழுக்க பெஞ்ச் மேல் நிற்க சொல்ல வேண்டும் போல தோன்றும் எனக்கு),
சென்னையின் நம்பர் 1 கிளப் உத்தண்டி பக்கத்துல இருக்கு சார்-மெம்பர்ஷிப் ஜஸ்ட் Rs .5௦௦௦௦/- ( தலை சுத்த ஆரம்பிக்கும் நமக்கு 'ஜஸ்ட்' என்ற வார்த்தையை கேட்டவுடன் )
கிரெடிட் கார்டு ப்ரீ டெலிவரி பண்றோம் சார், மருத்தவ காப்பீடு எடுத்துகோங்க சார், பர்சனல் லோன் வேணுமா சார்
 ... இப்படி பற்பல அழைப்புகள்...
சில நாட்களாய், அனாதை குழந்தைகளுக்கு பணம் அனுப்ப சொல்லி காலை 10.௦௦ மணிக்கே தொண்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள்..
சில நேரம் எதிர் முனையில் பேசும் பெண்ணின் குரலை கேட்டவுடன் நமக்கும் கோபமும், சில நேரம் பாவமும் மாறி மாறி தோன்றும்...
தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என ஒரு நாள் யோசித்தேன்..
 
இதோ சில எளிய வழிகள்..
கால் 1 :
எதிர்முனை.. இன்சூரன்ஸ் பாலிசி எடுங்க சார்,
நான்: ஐயோ என் பொண்டாட்டி இன்சூரன்ஸ் agent ... நானே பாலிசி கிடைக்காம இந்த மாசம் திண்டாடறேன்...
எதிர்முனை.. சிரித்துவிட்டு.... என்ன கம்பெனி சார் நீங்க ...( அப்பொழுதும் போனை வைக்க மாட்டார்கள் சிலர்)
கால் 2 :
எதிர்முனை- சென்னைக்கு அடுத்து திண்டிவனம் பக்கம் பிளாட் விற்பனை
நான்- நானே ரியல் எஸ்டேட் புரோக்கர்... என்கிட்டயேவா
எதிர்முனை-சாரி சார் ( கால் கட்)
 
கால் 3 :
எதிர்முனை:சென்னையின் நம்பர் 1 கிளப் உத்தண்டி பக்கத்துல இருக்கு சார்-
நான்- என்ன கிளப்
எதிர்முனை: Country கிளப் சார்
நான்- போன வாரம் தான் உங்க கிளப் ல மெம்பரா சேர்ந்தேன்..செக் பண்ணிட்டு போன் பண்ணுங்க மேடம்..
எதிர்முனை: சாரி சார்..
 
கால் 4 :
எதிர்முனை: கிரெடிட் கார்டு ப்ரீ டெலிவரி பண்றோம் சார்
நான்- எனக்கு கொடுக்க மாட்டாங்க மேடம்..
எதிர்முனை: ஏன் சார்?
நான்- ஏற்கனவே என் பேரு CIBIL ல வந்து இருக்கு..Default லிஸ்ட் ல என் பேரு இருக்கு மேடம்...
எதிர்முனை: (பதில் ஏதும் சொல்லாமல் போன் துண்டிக்க படும் )
 
கால் 5 :
எதிர்முனை:அனாதை குழந்தைகளுக்கு பணம் அனுப்புங்க சார்
நான்- நான் காலேஜ் ஸ்டுடென்ட் மேடம்...எனக்கே எங்க அப்பா பாக்கெட் மணி கொடுக்கல... ரீசார்ஜ் வேற பண்ணனும்
எதிர்முனை: சாரி சார்
இப்படி பட்ட அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...

16 comments:

 1. கலக்கல். எனக்கும் இத்தகைய அழைப்புகள் வரும்.DO not call-ல் ரிஜிஸ்தர் பண்ணிருக்கேன். எப்படி நீங்க எனக்கு கால் பண்ணுறீங்க என கேட்டால் " சாரி சார்" என துண்டித்து விடுவார்கள்

  நீங்கள் சொன்ன மாதிரி தொலை பேசி உரையாடல்கள் காமெடியா இருந்தது . முயற்சித்து பார்க்கலாம் தான்

  ReplyDelete
 2. இது இருக்கட்டும்...எனக்கு வரும் 'ராங் நம்பர் காலை'த்தான் நான் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பேசறது வழக்கம்! அதுவும் மறுபடி மறுபடி வேற அவர்களே தப்பாய் கால் செய்யும்போது நல்லா விளையாடுவேன்!
  தமிழ்மணம், இன்டலி போன்றவற்றில் இணைக்கவும். ரீடர்ஸ் அதிகம் கிடைப்பார்கள்...(ஓகே யா மோகன்?!!)

  ReplyDelete
 3. Word verification எடுத்து விடவும்! இது என் யோசனைதான்.

  ReplyDelete
 4. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இப்படித்தான். லாப்டாப் வெச்சிருக்கீங்க இல்ல... டேட்டா கார்ட் வாங்குங்க என போனில் கூப்பிட்டவரிடம் என்ன இந்த மோசமான கம்பெனியில் வேலை செய்யரீங்க சர்வீசே சரியில்லையே வேற பக்கம் வேலைக்கு போங்க என செய்யற வேலைக்கே உலை வைத்தார். திரும்ப போன் வருமா ? ...உகூம்...

  நகைச்சுவையான யோசனை !!. நன்றி.

  http://eniyavaikooral.blogspot.com

  ReplyDelete
 5. அருமையான வழிமுறைகள். நீங்க குறிப்பிட்டுள்ள wrong calls எனக்கு வருவதில்லை என்றாலும் ஒரு சில நபர்கள் தவறாக அழைத்துவிட்டால் அவர்களில் பெயரிலுள்ள பிரபலங்களை குறிப்பிட்டு பேச ஆரம்பித்து விடுவேன். சம்பந்தப்பட்ட நபர் அலறியடித்து ஃபோனைக் கட் பண்ணிவிடுவார். (eg. hello நான் விசு பேசுறேங்க.. ... ஓ விசு சாரா,, உங்க great fan sir நானு,, போனவாரம் அரட்டை அரங்கத்துல .... அப்படின்னு ஆரம்பித்து ஒரு 5 நிமிடங்கள் மூச்சு விடமல் பேசினால் தானாகவே lane cut ஆகிடும்)
  you are writing interestingly Ram ,, Keep it up.

  ReplyDelete
 6. நல்ல நகைச்சுவையாக உள்ளது உங்கள் பதிவு./அய்யா உங்களை மாதிரி ஒரு ஜீவன் நான்.c/o platform மாதிரி கடை விரிக்க தெரியாம இருக்கிறேன்,பதிவுலகில் ஒரு புழு பூச்சி கூட தெரியாத என்னையும் வந்து பார்த்துக்கோங்க.tamilmottu.blogspot.com.

  ReplyDelete
 7. அருமையான தொடக்கம் வாழ்த்துக்கள்.... பல்சுவையாக வித்தியாசமான த்லைப்புகளில் எழுதுங்கள்

  ReplyDelete
 8. நண்பர் மோகன்குமார் அவர்களின் பதிவின் மூலமாக உங்கள் தளத்திற்கு வந்தேன். அருமையான பதிவு. நகைச்சுவையான நடை. அழகு. ரசித்தேன். என் அனுபவம் இது.

  போன் பெல் அடித்தது.

  "ஹலோ" என்றேன்.

  "சார். கறிக்கடையா?"

  மனதுக்குள் சிரித்துக்கொண்டு "ஆமா" என்றேன்.

  "சார். கறி வேணும்"

  "எத்தனை கிலோ. ஐம்பதா? நூறா?"

  "சார். என்ன இது? ஒரு கிலோதான் வேணும்"

  "இல்லை. ஒரு கிலோலாம் தர்றது இல்லை. குறைந்தது பத்து கிலோ வாங்கினாதான் தருவோம்."

  "சார். என்ன சார் சொல்றிங்க?"

  "நீங்க அடுப்புக் கரிதானே கேட்குறிங்க?"

  "இல்லை. கோழிக்கறி."

  "சார். இது அடுப்புக் கரி விக்கிற கடை. ராங் நம்பர்."

  "???!!!!.....!" எதிர்முனை நிசப்தமாகி 'கட்' ஆகியது.

  எப்படி இருக்குது பார்த்தீங்களா?. போனை எடுத்தா நீங்க யாருன்னு கூட கேட்காம கறிக்கடையான்று கேள்வி. நல்லா கேட்குறாங்கய்யா டீட்டெயிலு.

  குறிப்பு: நாம் வேலை பார்ப்பது அரசு அலுவலகம்.(How is it?)

  ReplyDelete
 9. நண்பர் மோகன்குமார் அவர்களின் பதிவின் மூலமாக உங்கள் தளத்திற்கு வந்தேன். நகைச்சுவை எழுத்து உங்களுக்கு எளிதாக வருகிறது.. தொடருங்கள்..

  ReplyDelete
 10. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! தொடருங்கள் !

  ReplyDelete
 12. ஆரம்பமே அசத்தல். எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டீர்கள். தொடர வாழ்த்துக்கள்...

  அப்படியே இந்த verification பார்ட்டை எடுத்து விடுங்களேன். பின்னூட்டம் போட கஷ்டமாக இருக்கிறது.

  ReplyDelete
 13. வாசித்து வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி... குருவாயூர் சென்று கொண்டு இருக்கிறேன்... வந்த பிறகு புதிய திரட்டிகள் போடுகிறேன்

  ReplyDelete
 14. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete